முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Updated On : 2 ஆகஸ்ட், 2023 at 11:45 AM
பகிர்:

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடா் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று காலை மக்களவை கூடிய உடனே மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். 

Advertisement

மணிப்பூா் நிலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார். 

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றம் 10-வது நாளாக இன்று முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.