இந்தியா

தில்லி விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்!

தில்லியில் இருந்து அல்மாட்டி கடத்திச்செல்ல முயன்ற ரூ.75 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

DIN

புது தில்லி: தில்லியில் இருந்து அல்மாட்டி கடத்திச்செல்ல முயன்ற ரூ.75 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சனிக்கிழமை அல்மாட்டிக்கு செல்லும் ஏர் அஸ்தானா விமானம் புறப்படத் தயாரானது. அதில் செல்லவிருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, எக்திவோர் அப்துல்லேவா (உஸ்பெகிஸ்தான்) என்ற வெளிநாட்டு பெண் பயணியிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில், அவரிடம் இருந்து சுமார் ரூ.75 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பறிமுதல் செய்துள்ளதாகவும், மேலும், மருந்துகளை எடுத்துச் செல்வதற்கான உரிய ரசீதுகள் எதுவும் அவரிடம் இல்லை என்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். 

பின்னர், அந்த பெண் பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அவரது உடமைகள் அனைத்தும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்பாண்டத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கார் வெடிப்பு சம்பவம்: காயமடைந்தவர்களை சந்தித்த அமித் ஷா!

நைக்காவின் 2-வது காலாண்டு வருவாய் 6% உயர்வு!

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: அனைத்து கோணங்களிலும் விசாரணை - அமித் ஷா

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: சென்னையில் தீவிர கண்காணிப்பு!

SCROLL FOR NEXT