இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை இன்றும் முடங்கியது!

DIN

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அமளி தொடர்ந்ததால், பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் இரண்டாவது நாளாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பகல் 12 மணிக்கு விவாதம் தொடங்கவுள்ள நிலையில், காலை 11 முதல் நடைபெற்று வரும் கேள்விநேரத்தை ஒத்திவைத்து மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT