அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது!
நிலச்சரிவு காரணமாக நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
நிலச்சரிவு காரணமாக நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்கிய அமர்நாத் புனித யாத்திரை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று பகவதி நகர் அடிப்படை முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் அமர்நாத் பயணிகளின் பாதுகாப்பு கருதி யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Advertisement
இதையடுத்து, இன்று காலை முதல் மீண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இதில் 999 பேர் கொண்டு 37வது குழு இன்று அதிகாலை பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அதில் 422 பேர் பால்டால் வழியாகவும், 577 பேர் பஹல்காம் வழியாகவும் சென்றனர்.
புனித பயணம் தொடங்கி இதுவரை 4.28 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 62 நாள்கள் நிகழும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 31-ல் நிறைவடைகின்றது.