சந்திரயான் 3: இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!
நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வுப் பணியை தொடங்கியது.
நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வுப் பணியை தொடங்கியது.
சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் ஒரு மாத பயணத்துக்குப் பிறகு நேற்று மாலை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
லேண்டரில் இருந்து மெதுவாக தரையிறங்கி, தனியே நகர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை ரோவர் தொடங்கியது. வெற்றிகரமாக ரோவர் பிரிந்த நிலையில் சந்திரயான் 3 திட்டத்தின் அறிவியல் ஆய்வுப் பணிகள் தொடங்கின.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ராக்கெட்ரி, கடைசி விவசாயி.. யாருக்கெல்லாம் தேசிய விருதுகள்?
லேண்டரில் உள்ள அனைத்து அறிவியல் ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டரில் ILSA, RAMBHA and ChaSTE ஆகியவற்றின் செயல்பாடுகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், உந்துவிசைக்கலன் அமைப்பு கடந்த ஞாயிறு முதல் தனித்து செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.