ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 400-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது.
விஜயவாடா கே.பி.நகர் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இருசக்கர ஷோரூமில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஷோரூம் முதல் தளத்தில் மின்சார வாகனங்களும், கீழ்த் தளத்தில் பெட்ரோல் வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதேசமயம் பைக் ஷோரூம் சர்வீஸ் சென்டரும் இயங்கி வந்தது.
இந்நிலையில், மின்சார வாகனம் வெடித்ததில் அருகிலிருந்து வாகனங்களுக்கு மளமளவென தீ பரவியது. 1000 வாகனங்கள் வரை நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் 400-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசமானது.
இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து சேதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.