நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளை பிரதமர் மோடி சந்தித்தார். சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து, பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது:
இந்தியாவின் பெருமையான அசோக சக்கரம் தற்போது நிலவில் பதிக்கப்பட்டுள்ளது. நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' என்று அழைக்கப்படும்.
நமது நாட்டின் கெளரவத்தை, பெருமையை உலகிற்கே நாம் நிரூபித்துள்ளோம். தென்னாப்ரிக்கா, கிரீஸ் சென்றிருந்தாலும் என் மனது முழுவதும் இங்குதான் இருந்தது. விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நான் தலைவணங்குகிறேன் என்று பிரதமர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.