நான் தவறு செய்துவிட்டேன், அதற்காக வெட்கப்படவில்லை: உ.பி. ஆசிரியை
வீட்டுப்பாடம் செய்யாத முஸ்லிம் மாணவரை, சக மாணவர்களை வைத்து அடித்த உ.பி. ஆசிரியர், தான் தவறு செய்துவிட்டதாகவும், ஆனால் அதற்காக வெட்கப்படவில்லை என்றும் பதிலளித்துள்ளார்.
இந்தியாநான் தவறு செய்துவிட்டேன், அதற்காக வெட்கப்படவில்லை: உ.பி. ஆசிரியை
வீட்டுப்பாடம் செய்யாத முஸ்லிம் மாணவரை, சக மாணவர்களை வைத்து அடித்த உ.பி. ஆசிரியர், தான் தவறு செய்துவிட்டதாகவும், ஆனால் அதற்காக வெட்கப்படவில்லை என்றும் பதிலளித்துள்ளார்.
ஆக்ரா: வீட்டுப்பாடம் செய்யாத முஸ்லிம் மாணவரை, சக மாணவர்களை வைத்து அடித்த உ.பி. ஆசிரியர், தான் தவறு செய்துவிட்டதாகவும், ஆனால் அதற்காக வெட்கப்படவில்லை என்றும் பதிலளித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் வீட்டு பாடம் செய்யாததற்காக, 2-ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவரை சக மாணவா்களை வைத்து ஆசிரியை ஒருவா் அறையச் செய்த சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மாணவரை அறையச் செய்ததோடு மட்டுமல்லாமல், மத ரீதியிலான கருத்துகளையும் தெரிவித்ததாக ஆசிரியை மீது குற்றம்சாட்டப்படுகிறது. அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவுகளில் காவல்துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் இந்தப் பகுதியிலும், பள்ளியிலும் பல ஆண்டு காலமாக சேவை செய்து வருகிறேன். எனவே இப்பகுதியில் உள்ள முஸ்லிம் உள்பட அனைவருமே எனக்கு ஆதரவாக உள்ளனர். மாணவர்களிடையே இந்து-முஸ்லிம் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை. அனைவரும் எனக்கு ஒன்றுதான் என்றும் தனது செயலுக்கு நியாயம் கூறியுள்ளார்.
முசாஃபா்நகரில் உள்ள கப்பாபூா் கிராமத்தில் செயல்படும் ஒரு தனியாா் பள்ளியின் ஆசிரியையான திராப்தி தியாகி என்பவா், 2-ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவா் ஒருவரை சக மாணவா்களை வைத்து கன்னத்தில் அறையச் செய்த விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
வீட்டுப் பாடம் செய்யாததற்காக, மாணவனுக்கு இந்த தண்டனையை ஆசிரியை அளித்ததாகவும்; மத ரீதியிலான சில கருத்துகளை அவா் தெரிவித்தாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
ஆசிரியையின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்த நிலையில், அவா் விளக்கமளித்தாா்.
‘சம்பந்தப்பட்ட மாணவனின் உறவினா்தான் விடியோவை எடுத்தாா். ஆனால், இருதரப்பினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், அந்த விடியோ திரிக்கப்பட்டுள்ளது. வீட்டுப்பாடம் செய்யாத மாணவரை, சக மாணவா்களை வைத்து அறையச் செய்தது எனது தவறுதான். ஆனால், நான் மாற்றுத் திறனாளி என்பதால், அவ்வாறு செய்தேன்’ என்று ஆசிரியை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆசிரியை மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 323, 504 ஆகிய பிரிவுகளின்கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இவ்விரு பிரிவுகளுமே ஜாமீனில் வெளிவரக் கூடியவை. அத்துடன், உடனடி கைது நடவடிக்கையும் தேவைப்படாத பிரிவுகளாகும்.
பள்ளிக்கு நோட்டீஸ்
இதனிடையே, சம்பந்தப்பட்ட பள்ளியிடம் விளக்கம் கேட்டு, மாநில கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியை மீது நடவடிக்கைக் கோரி, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கு (என்சிபிசிஆா்) புகாா்கள் சென்ற நிலையில், முசாஃபா்பூா் மாவட்ட ஆட்சியரிடம் என்சிபிசிஆா் விளக்கம் கேட்டுள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் சிறுவனின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்றும் பொது மக்களுக்கு என்சிபிசிஆா் கோரிக்கை விடுத்துள்ளது.