இந்தியா

கர்நாடகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000: ராகுல் காந்தி தொடக்கிவைத்தார்

கர்நாடகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2,000 வழங்கும் 'குடும்பலட்சுமி' திட்டத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடக்கிவைத்தார். 

DIN

கர்நாடகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2,000 வழங்கும் 'குடும்பலட்சுமி' திட்டத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடக்கிவைத்தார். 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து தேர்தல் வாக்குறுதிகளில் அளித்த முக்கிய 5 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அதில் ஒன்றான கர்நாடகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வங்கிக்கணக்கில் செலுத்தும் 'குடும்பலட்சுமி' திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே முன்னிலையில் ராகுல் காந்தி தொடக்கிவைத்தார். 

இதன் மூலமாக 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விழாவில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைநகரில் செவ்வாய்க்கிழமை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த அன்புமணி

ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT