நாடாளுமன்றம் 
இந்தியா

செப். 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சிறப்புக் கூட்டத்தொடர் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் (17-வது மக்களவையின் 13-வது அமர்வு மற்றும் மாநிலங்களவையின் 261- வது அமர்வு) செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும். 

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வேளையில், நாடாளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் நடப்பதை எதிர்நோக்குகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளதால் முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் பிரச்னையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான நாள்கள் இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்? - கனிமொழி பதில்!

வாக்காளரை துன்புறுத்தாதீர்; ஆதாரை ஏற்றுக்கொள்க: உச்ச நீதிமன்றத்தில் மமதா வாதம்

முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படும் ஆடுகளம் தொடர்!

மமதா அரசு மத்திய திட்டங்களைத் தடுக்கிறது: பாஜக எம்பி குற்றச்சாட்டு!

சொத்து பிரச்னை: ஹோட்டல் அறையில் உறவினர் கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்!

SCROLL FOR NEXT