இந்தியா

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர எதிர்ப்பு: கர்நாடகத்தில் விவசாயிகள் போராட்டம்!

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்று கூறி கர்நாடகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

DIN

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்று கூறி கர்நாடகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க மறுத்து வருகிறது. கர்நாடக விவசாயிகளுக்கே சாகுபடிக்கு போதுமான நீர் இல்லை என்று கர்நாடக அரசு ஒரு பக்கம் கூற, இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் மாண்டியா பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிடக்கூடாது என்று கோஷமிட்டு வருகின்றனர். 

முன்னதாக கர்நாடக விவசாயிகள் நேற்று கிருஷ்ணசாகர் அணை முன்பாக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT