முகப்பு
இந்தியா

மிசோரம் வாக்கு எண்ணிக்கை டிச. 4-க்கு ஒத்திவைப்பு

மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கையை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:20 PM
இந்திய  தேர்தல் ஆணையம்
பகிர்:

மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கையை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறவிருந்த வாக்கு எண்ணிக்கையை டிச. 4 ஆம் தேதிக்கு இந்திய  தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

டிச. 3 அன்று மிசோரம் மக்களின் பண்டிகை தினம் என்பதால், தேதியை மாற்றக்கோரி பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கை எழுந்ததால் வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தை மிசோ தேசிய முன்னணி ஆட்சி செய்து வருகின்றது. இம்மாநிலத்தின் 40 தொகுதிகளுக்கான சட்ட பேரவைத் தேர்தல், கடந்த நவம்பர் 7 அன்று ஒரே கட்டமாக நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.