மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் 33 வயதுள்ள பெண், தன் 7 வயது மகனுடன் ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை கேட்பூர்ணா ஆற்றின் கரையில் ஒதுங்கிய இருவரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்குக் காவலர்கள் அனுப்பியுள்ளனர்.
பெண்ணின் உடைமைகளில், அவர் வார்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அங்கிருந்து அகோலா பகுதிக்கு ரயில் மூலமாக வந்ததற்கும் குரான்கெட் பகுதிக்கு பேருந்தில் வந்ததற்குமான பயணச் சீட்டுகள் கிடைத்துள்ளன.
அந்தப் பெண் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.