கோப்புப் படம் 
இந்தியா

பேருந்து நடத்துநர் மீது பாலியல் வழக்கு

பேருந்தில் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக நடத்துநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

தானே: நவி மும்பை பகுதியில் மகாராஷ்டிர மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் பணியாற்றும் நடத்துநர் மீது பாலியல் வழக்கைக் காவலர்கள் பதிவு செய்துள்ளனர்.

17 வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டைப் பதிவு செய்ததாகவும் 48 வயதான சந்தோஷ் வாடேகர் என்கிற நடத்துநர் மீது இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது, 17 வயது பெண் தபோலியில் இருந்து மும்பைக்கு நவ.26 மற்றும் 27 தேதிகளில் பயணித்துள்ளார். அதே பேருந்தில் சந்தோஷ் நடத்துநராகப் பணியாற்றியுள்ளார். இரவு நேரத்தில், பெண் தூங்கும்போது அவரைத் தவறாக தொட முயன்றதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகார் குறித்து காவலர்கள் விசாரித்து வருவதாகவும் இன்னும் கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மும்பை காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT