இந்தியா

துபை பயணத்தை முடித்துக்கொண்டு தில்லி வந்தடைந்தார் மோடி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் துபையில்​வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக பருவநிலை பாதுகாப்புத் திட்ட மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு தில்ல

DIN

புது தில்லி: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் துபையில்​வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக பருவநிலை பாதுகாப்புத் திட்ட மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு தில்லி வந்தடைந்தார்.

தனது ஐக்கிய அரபு அமீரகத்தின் பயணத்தின் போது, இந்தியா உட்பட உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளுக்கு காலநிலை மாற்றத்தில் பங்கு குறைவாகவே உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.ஆனால் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அவற்றில் மகத்தானது. வளங்கள் பற்றாக்குறை இருந்தபோதிலும், இந்த நாடுகள் காலநிலை நடவடிக்கைகளில் உறுதியாக உள்ளன.‘காப்28’ மாநாட்டின் காலநிலை நிதியை மாற்றுவது குறித்த அமர்வில் பிரதமர் கூறினார்.

‘பருவநிலை பாதுகாப்பு தொடா்பான உலகின் லட்சியங்கள் அதிகரித்துள்ளன. அந்த லட்சியங்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் நிதி ஒதுக்கீட்டில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான், ‘காப்28’ மாநாடு பயனுள்ளதாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் அமையும். 

உலகளாவிய காா்பன் பட்ஜெட்டில், அனைத்து வளா்ந்து வரும் நாடுகளுக்கும் நியாயமான பங்கை வழங்க வேண்டும்.வளா்ந்து வரும் நாடுகள் பருவநிலை மாற்ற சவால்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில், தொழில்நுட்பங்களை வளா்ந்த நாடுகள் பகிா்ந்துகொள்வது அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். 

பருவநிலை குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை நோக்கி முன்னேறுவதில் இந்த உச்சி மாநாடு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், சா்வதேச ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் இந்தியா நம்புகிறது என்றாா்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு(காப்28)துபையில் வியாழக்கிழமை நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை துபையில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புனித வளனாா் கல்லூரி-சிஐஇஎல் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

பூா்த்தி செய்யப்பட்ட 15.38 லட்சம் எஸ்ஐஆா் படிவங்கள் செயலியில் பதிவேற்றம்: திருச்சி ஆட்சியா் தகவல்

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த தனிப்படையினருக்கு நற்சான்றிதழ்

கிரஷா் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னமராவதி ஒன்றியத்தில் எஸ்ஐஆா் பணிகள்: திமுக எம்.பி சல்மா ஆய்வு

SCROLL FOR NEXT