4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தில்லி காங்கிரஸ் தலைமை அலுவகத்துக்கு இனிப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தேர்தலில் பெரும்பாலான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் எனக் கூறப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியினர் தலைமை அலுவலகத்திற்கு அதிக அளவில் இனிப்புகளை இறக்குமதி செய்துள்ளனர்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தபால் வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் ராஜஸ்தான், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில், தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அதிக எண்ணிக்கையிலான இனிப்புகள் குவிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் பெரும் நம்பிக்கையில் உள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். தேர்தலில் ஒவ்வொரு சுற்று முடிவின்போதும் முன்னிலை பெறுவதைக் கொண்டாடும் விதமாக காங்கிரஸ் தொண்டர்கள் லட்டுகளைக் குவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.