பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டம் | பிடிஐ 
இந்தியா

ராஜஸ்தானில் கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தது பாஜக

ராஜஸ்தானில் வெளியாகியிருக்கும் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பாஜக 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வெளியாகியிருக்கும் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பாஜக 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

இது ராஜஸ்தான் மாநிலத்தின் பெரும்பான்மையை பெறுவதற்கான எண்ணிக்கையை விட அதிகம் என்பதால், பாஜக ராஜஸ்தானில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் 75 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் ஒரு தொகுதி நீங்கலாக 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

சுமார் 5.25 கோடி வாக்காளர்களைக் கொண்ட ராஜஸ்தானில் 73.92 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவும் பலப்பரீட்சை நடத்திய இந்தத் தேர்தலில்,  வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குஎண்ணிக்கைத் தொடங்கியது முதலே பாஜகவின் கை ஓங்கி வருகிறது. இந்த தேர்தலில் சுமார் 1.862 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களது தலையெழுத்தை முடிவு செய்யும் வகையில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT