முகப்பு
இந்தியா

டிச. 6ல் 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம்!

'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:20 PM
மல்லிகார்ஜுன கார்கே
பகிர்:

'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இக்கூட்டம் தில்லியில் வரும் டிச. 6 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

வரும் டிச. 6 ஆம் தேதியன்று நடைபெறும் கூட்டத்தில்  28 கட்சிகளைச் சோ்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானாவில் மத்திய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →