இந்தியா

தெலங்கானா: கொண்டாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர்!

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருவதையொட்டி காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருவதையொட்டி காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தெலங்கானாவில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ. 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

இந்நிலையில் தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. காலை 10.55 மணி நிலவரப்படி காங்கிரஸ் -64, பிஆர்எஸ் - 41, பாஜக - 9, பிற - 5 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின்  பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. 

இதையடுத்து, தெலங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT