இந்தியா

ரூ.5000 கோடி இடைக்கால நிவாரணம் கோரும் தமிழக அரசு!

DIN


சென்னை மற்றும் சில மாவட்டங்களில் தீவிர மழையால் பெரும் பாதிப்பைச் சந்தித்துவரும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கும், பெரிய சேதங்களை சரிசெய்வதற்கும் தமிழ்நாட்டிற்கு ரூ.5000 கோடி இடைக்கால நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கையிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மொத்த அமைச்சரவையும், நகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மீட்புப் படையினருடன் தீவிரமாக மீட்புப்பணிகள் நடந்துவருவதாகக் கூறியுள்ளார். 

அரசு நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பெரிய உள்கட்டமைப்பு பாதிப்புகளை சரிசெய்ய காலம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும், இடைக்கால நிவாரண உதவியாக 5000 கோடி ரூபாயை தமிழக அரசு கோரியுள்ளதாகக் கூறினார். மத்திய அரசு தமிழ்நாட்டின் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு ஆரம்ப கால நிவாரணத் தொகையாக ரூ. 5000 கோடியை உடனே மாநிலத்திற்கு வழங்கி வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT