இந்தியா

சுகாதாரத் துறையில் ஊழல்கள் மலிந்துள்ளன: சஞ்சய் ரெளத்

DIN

மும்பை: சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத், புதன்கிழமை மகாராஷ்டிர மாநில முதல்வருக்கு அம்மாநிலத்தில் நடக்கும் சுகாதாரத் துறை ஊழல்கள் குறித்து கடிதம் அனுப்பியுள்ளார்,

தனியார் மருத்துவமனைகள், அரசின் மருத்துவ காப்பீட்டின்கீழ் இடம்பெற லஞ்சம் கேட்கப்படுவது உள்பட பல புகார்களைப் பட்டியலிட்டு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்,

இது தொடர்பாக முதல்வரின் எதிரணியைச் சேர்ந்த சுகாதார துறை அமைச்சர் தானாஜி சாவந்த் நாளை (வியாழக்கிழமை) விளக்கமளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகள் அரசின் மருத்துவ காப்பீட்டின்கீழ் தங்களை இணைத்துக்கொள்ள படுக்கையொன்றுக்கு ரூ.1 லட்சம் கேட்கப்படுவதாகவும் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், இயக்குனர்கள் பணியமர்த்தப்பட்டுவதில் லஞ்சம் வாங்கப்படுவதாகவும் தேவையான தகுதிகள் சரிபார்க்கப்படுவதில்லை என்றும் சஞ்சய் ரெளத் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களிடமும் லஞ்சம் வாங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT