வான்கா | Paytm Insider 
இந்தியா

வான்காவின் ஓவியங்களைத் தரிசிக்கும் நிகழ்வு...

வான்காவின் ஓவியங்கள், தொழில்நுட்பத்தால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு திரையிடப்படவுள்ளன.

DIN

வான்காவின் காலத்தால் அழியாத ஓவியங்களைத் தொழில்நுட்பத்தின் உதவியால் பார்வையிட செய்யும் ‘தி ரியல் வான்கா இம்மெர்ஸிவ் எக்ஸ்பிரீயன்ஸ்’ இந்தியாவின் முக்கிய நகரங்களில் திரையிடப்படவுள்ளது.

இதன் முதல் திரையிடல், ஜன.5, 2024 அன்று சென்னையில் தொடங்குகிறது.

வான்காவின் அதீத அனுபவம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரையிடல், கலை நோக்கத்தோடு தயாரிக்கப்பட்ட ஓவியங்களின் தொகுப்பும் இசைக் கோர்வையும் அடங்கியது.

20கே உச்சபட்ச ஒளி உமிழும் ப்ரொஜெக்டர்கள் கொண்டு ஓவியங்களின் நிறங்களில் கூடுதல் துல்லியத்தோடு திரையிடப்படவுள்ளது.

வின்சென்ட் வான்காவின் புகழ்பெற்ற ‘ஸ்டார்ரி நைட்’,  ‘சன்பிளவர்ஸ்’ உள்பட தேர்வு செய்யப்பட்ட ஓவியங்களும் அவரின் சிக்கலான வாழ்வையும் அளப்பரிய கலை உலகையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்தத் திரையிடல் இருக்கும் என்கிறார்கள் அமைப்பாளர்கள்.

சென்னை எக்ஸ்பிரஸ் அவின்யூவில் தொடங்கும் இந்தத் திரையிடலுக்கான டிக்கெட்கள் பேடிஎம் இன்சைடர் ஆப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT