இந்தியா

சந்திரசேகர ராவ் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி

தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

DIN

தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் காருவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதை அறிந்து மனவேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

பிஆர்எஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான கே. சந்திரசேகர் ராவ் வியாழக்கிழமை இரவு எர்ரவல்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதுடன், இடுப்பு பகுதியில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து நள்ளிரவு 2 மணிக்கு யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிஆர்எஸ் தலைவர் கேசிஆர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT