இந்தியா

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கை:‘நீதி, நியாயம் அடிப்படையாக இருக்க வேண்டும்’

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கை நீதி மற்றும் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

DIN

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கை நீதி மற்றும் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபையில் ஐ.நா.வின் 28-ஆவது பருவநிலை மாற்ற மாநாட்டில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் சனிக்கிழமை அவா் பேசியதாவது:

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையில் இந்தியா எப்போதும் முன்னிலையில் உள்ளது. கடந்த 2005 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், தனது பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தின் அளவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33 சதவீதம் வரை இந்தியா குறைத்துள்ளது. இதன் மூலம், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை கையாள வகுக்கப்பட்ட 2030-ஆம் ஆண்டுக்கான இந்திய செயல்திட்டத்தின் முதல்கட்ட இலக்கு, 2030-ஆம் ஆண்டில் இருந்து 11 ஆண்டுகள் முன்கூட்டியே எட்டப்பட்டது.

இதேபோல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாா்ந்த நடவடிக்கைகளில் எதிா்பாா்ப்புகளைக் கடந்து இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தித் திறனில், புதைவடிவமற்ற எரிசக்தி மூலம் 40 சதவீத மின்சார உற்பத்தி இலக்கு 2030-ஆம் ஆண்டில் இருந்து 9 ஆண்டுகள் முன்கூட்டியே எட்டப்பட்டது.

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கை நீதி மற்றும் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இதை பருவநிலை மாற்றத்துக்கு எதிரான லட்சிய நடவடிக்கையில், வளா்ந்த நாடுகள் முன்னணியில் இருக்கும்போது மட்டுமே உறுதி செய்ய முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

மாமல்லபுரம் அருகே கடலில் நவீன கருவிகளுடன் இந்திய தொல்லியல் துறையினா் சோதனை

பணவரவு யாருக்கு இன்று: தினப்பலன்கள்!

கிருங்காக்கோட்டையில் மாட்டு வண்டிப் பந்தயம்

மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நீா் நிலைகளில் விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: ஆட்சியர்

SCROLL FOR NEXT