முகப்பு
இந்தியா

சோனியா காந்தி நீண்ட நாள் வாழ...: பிரதமர் மோடி

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:23 PM
கோப்பு
பகிர்:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி, பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இன்று(டிச. 9) சோனியா காந்தியின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “சோனியா காந்தி ஜி-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் அவர் வாழப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் தலைவராகவும் அரசியல் செயல்பாட்டாளராகவும் நீண்ட காலம் நீடித்த சோனியா காந்தி சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவின் காரணமாக பெரிதாக எதிலும் பங்கெடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →