கோப்புப்படம். 
இந்தியா

இந்தியாவில் போதைப்பொருள் கடத்தும் நைஜீரியப் பெண்!

மும்பையிலிருந்து தில்லிக்கு ஹெராயின் கடத்த முயன்ற நைஜீரியப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

DIN

மும்பையிலிருந்து தில்லிக்கு 2 கோடி மதிப்பிலான ஹெராயினைக் கடத்த முயன்ற நைஜீரியாவைச் சேர்ந்த பெண்ணை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 

கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், விக்டோரியா ஒக்காஃபார் எனும் நைஜீரியப் பெண், மும்பையிலிருந்து தில்லிக்கு 20 காப்சூல் ஹெராயினைத் தனது உடைகளுக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

பிடிக்கப்பட்ட பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, தனக்கு அந்த வேலையைக் கொடுத்த நபரின் பெயர் 'ஒன்யே' எனவும் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.  

அந்தப் பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுவெளியீடாகும் அமர்க்களம்!

சேலத்தில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கிடைக்குமா?

பெண்களுக்கு முதலில் திருமணமா? வேலையா? - சமூக ஊடக கருத்துகளுக்கு உபாசனா பதில்!

அழகுச் சங்கமம்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

ஓடிடியில் வெளியாகும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படம்!

SCROLL FOR NEXT