இந்தியா

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு!

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

DIN

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று, அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு கடந்த 10 நாள்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் இன்று முடிவுக்கு வந்ததுள்ளது. 

ராஜஸ்தானில் 199 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் நடைபெற்ற தோ்தலில் 115 இடங்களைக் கைப்பற்றி, பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு 69 இடங்களே கிடைத்தன.

இந்த நிலையில், ராஜஸ்தானில் முதல்வரை தேர்ந்தெடுக்கப்படுவதற்காக ஜெய்ப்பூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்வான அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். 

மாநிலத்தில் முதல்வா் தோ்வுக்கு மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்பட மூன்று பாா்வையாளா்களை கட்சி மேலிடம் நியமித்த நிலையில், எம்எல்ஏ பஜன்லால் சர்மாவை ராஜஸ்தானின் புதிய முதல்வராக பாஜக தேர்ந்தேடுத்துள்ளது.

அதேபோன்று, பிரேம்சந்த் பைரவா மற்றும் தியா குமாரி ஆகிய இருவரும் துணை முதல்வர்களாகவும் செய்ய செய்யப்பட்டனர். வாசுதேவ் தேவ்நானி பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ராஜஸ்தான் முதல்வராக தேர்வான பஜன்லால் சர்மாவுக்கு ராஜ்நாத் சிங் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டுவசதி வாரிய மனை, வீடுகள் வாங்கியோருக்கு வட்டி சலுகை

நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டில் விலங்குகளின் கால் நகங்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் போலி மருத்துவா் கைது

ஐஎம் நியோ நிறுவனத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

இரு புதிய அவசர உதவி காவல் வாகனங்கள்: எஸ்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT