இந்தியா

இதுதான் மோடியின் வாக்குறுதியா? காங்கிரஸ் கண்டனம்!

மத்திய பிரதேசத்தின் அடுத்த முதல்வராக மோகன் யாதவைத் தேர்ந்தெடுத்ததற்காக காங்கிரஸ் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. 

DIN


மத்திய பிரதேசத்தின் அடுத்த முதல்வராக மோகன் யாதவைத் தேர்ந்தெடுத்ததற்காக காங்கிரஸ் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மத்திய பிரதேசத்தின் அடுத்த முதல்வராக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தலைவரும், மூன்று முறை எம்எல்ஏவாகவும் இருந்த மோகன் யாதவை பாஜக திங்களன்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

தேர்வு முடிவுகள் வெளியாகி 8 நாள்களுக்குப் பிறகு ம.பி. முதல்வரை பாஜக தேர்ந்தெடுத்துள்ளது. உஜ்ஜயினியில் அவர் மீது பெரிய அளவிலான கையாடல்கள் உள்பட பல கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. 

துஷ்பிரயோகம், அச்சுறுத்தல் போன்ற யாதவின் பல விடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. மத்தியப் பிரதேசத்துக்கு இதுதான் மோடியின் வாக்குறுதியா? என்று அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக தோ்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்: கனிமொழி எம்.பி.

தேமுதிக இண்டி கூட்டணிக்கு வரவேண்டும்: ஜோதிமணி எம்.பி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: டி.டி.வி. தினகரன்

ரயில்வே ஊழியா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் பதில்!

SCROLL FOR NEXT