மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது
மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மும்பை : மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மும்பையின் சேவ்ரி பகுதியில் தங்கியிருந்து, வங்கதேசத்திற்கு சட்டவிரோதமாக பணம் அனுப்பி வந்த புகாரில், வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் இம்மாதம் கைது செய்த நிலையில், அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மேலும், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களிடம் முறையான ஆவணங்கள் ஏதுமில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பெற்றிருந்த ஆதார் மற்றும் பான் கார்டுகள், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.