மக்களவைக்குள் புகுந்து புகைக் குண்டு வீசிய நபரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கிய எம்.பி.க்கள்... 
இந்தியா

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தவரை சரமாரியாகத் தாக்கிய எம்.பி.க்கள்! - வைரல் விடியோ

மக்களவைக்குள் புகுந்து புகை குண்டு வீசிய நபரைப் பிடித்து எம்.பி.க்கள் சரமாரியாகத் தாக்கிய விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

DIN

மக்களவைக்குள் புகுந்து புகை குண்டு வீசிய நபரைப் பிடித்து எம்.பி.க்கள் சரமாரியாகத் தாக்கிய விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

பாதுகாப்பை மீறி நாடாளுமன்ற மக்களவைக்குள் இன்று(புதன்கிழமை) பிற்பகல் இருவர் நுழைந்து புகைக் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர், திடீரென்று அவைக்குள் குதித்து ‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். 

பின்னர் மக்களவைக்குள் நுழைந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் அவைக்கு வெளியே கோஷமிட்ட இருவர் என ஒரு பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, மக்களவைக்குள் நுழைந்தவர்களில் ஒரு நபரை மடக்கிப் பிடித்து எம்.பி.க்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவத்தையடுத்து, பார்வையாளர்களுக்கு பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். மேலும், இன்றைய சம்பவம் குறித்து பேச, அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT