இந்தியா

விபாசனா தியானத்துக்குச் செல்கிறார் அரவிந்த் கேஜரிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வரும்,தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் அடுத்த வாரம் 10 நாள் விபாசனா தியானப் பயிற்சிக்குப் புறப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

PTI

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வரும்,தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் அடுத்த வாரம் 10 நாள் விபாசனா தியானப் பயிற்சிக்குப் புறப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தில்லியில் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு டிசம்பர் 19-ம் தேதி விபாசனா தியான வகுப்பிற்குச் செல்ல உள்ளார். 

விபாசனா என்பது பழங்கால பழங்கால இந்திய தியான நுட்பமாகும். இந்த தியானத்தை மேற்கொள்பவர்கள் தங்கள் மன நலனை மீட்டெடுக்கக்  குறிப்பிட்ட காலத்திற்குப் பேச்சு மற்றும் சைகைகள் மூலமாகவோ எந்தவொரு தொடர்பும் இல்லாமல் விலகி இருப்பார்கள்.

கேஜரிவால் நீண்ட காலமாக விபாசனா பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இவர் தியானப் பயிற்சியை மேற்கொள்ள கடந்த ஆண்டுகளில் பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், 10 நாள் விபாசனா தியானப் பயிற்சிக்குச் செல்லும் கேஜரிவால், இந்த ஆண்டு டிசம்பர் 19 முதல் 30 வரை செல்லவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT