இந்தியா

விஜய் திவஸை முன்னிட்டு மறைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி !

விஜய் திவஸ் நாளையொட்டி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்,

DIN

புது தில்லி: விஜய் திவஸ் நாளையொட்டி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார், அவர்களின் தியாகங்கள் இந்தியாவுக்கு தீர்க்கமான வெற்றிக்கு வழிவகுத்தன. அவர்களின் அசைக்க முடியாத மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பு, நாட்டின் வரலாற்றிலும் அதன் மக்களின் இதயங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரா்கள் டாக்காவில் இந்திய படைகளிடம் சரணடைந்தனா். இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 16 ஆம் தேதி ‘விஜய் திவஸ்’ கொண்டாடப்படுகிறது. இந்த போரின் மூலம் பாகிஸ்தானிடம் இருந்து அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு (வங்கதேசம்) இந்தியா விடுதலை பெற்று தந்தது.

இந்த நிலையில், போரில் இந்தியா வெற்றி பெற்ற நாளையொட்டி, போரில் உயிா்நீத்த வீரா்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போரில் இந்தியா வெற்றி பெற்ற நாளையொட்டி,"இன்று, ‘விஜய் திவஸ்’ கொண்டாடப்படுகிறது. 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வெற்றியை உறுதிசெய்து, நாட்டிற்கு பணிவுடன் சேவையாற்றிய அனைத்து துணிச்சலான மாவீரர்களுக்கும் இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் வீரமும், அர்ப்பணிப்பும் தேசத்திற்கு மகத்தான பெருமையை தந்துள்ளது. அவர்களின் தியாகமும், அசைக்க முடியாத மன உறுதியும் மற்றும் அர்ப்பணிப்பும் என்றென்றும் நிலைத்திருக்கும். அது நமது தேசத்தின் வரலாற்றிலும் மக்களின் இதயங்களிலும், பொறிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வீரத்திற்கு இந்தியா வணக்கம் செலுத்துகிறது மற்றும் அவர்களின் அசைக்க முடியாத மன உறுதியை நினைவு கூர்கிறது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

இதற்கிடையில், இந்திய இராணுவம் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "டிசம்பர் 16, 1971 இல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரின் மீதான இந்திய ஆயுதப்படைகளின் வரலாற்று வெற்றியைக் குறிக்கிறது. இந்த நாளில், இந்திய ஆயுதப்படையின் உறுதி மற்றும் துணிச்சலுக்கு வணக்கம் செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளது.

அறிக்கைகளின்படி, 1971 இல் நடைபெற்ற போரின்போது 3,900 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும், 9,851 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT