கோப்புப்படம். 
இந்தியா

கடலில் குளித்த மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆந்திரப் பிரதேசத்தில் கடலில் குளித்த மாணவர் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டார். 

DIN


ஆந்திரப் பிரதேசம் கிருஷ்ணா மாவட்டத்தில் கடற்கரையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் பெரிய அலைகளுக்கு நடுவே மாயமான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அடித்துச் செல்லப்பட்ட மாணவரின் உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணா மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் குளிக்கச் சென்றிருந்தனர். அப்போது அகில் எனும் மாணவர் பெரிய அலைகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டதாகவும் பின் மறைந்து விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தகவலறிந்து உடனே வந்த கடற்கரைக் காவல் படையினர் தேடுதல் பணியைத் துவங்கியுள்ளனர். மாணவரின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்

கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT