கோப்புப்படம் 
இந்தியா

பிரதமர் மோடியின் கேரள பயணம் ஜன.3-க்கு ஒத்திவைப்பு!

பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலத்தில் கலந்துகொள்ள உள்ள கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

DIN

பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலத்தில் கலந்துகொள்ள உள்ள கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்சூரில் உள்ள தெக்கிங்காடு மைதானத்தில் இரண்டு லட்சம் பெண்கள் பங்கேற்கும் 'ஸ்திரீ சக்தி மோடிக் ஒப்பம்' என்ற மாநாட்டில்  பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளதாக கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் கூறியுள்ளார்.

இந்த மாநாடு ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஜனவரி 3-ஆம் தேதி மாநாடு நடைபெறுவதாக சுரேந்திரன் அறிவித்துள்ளார்..

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், கேரள மாநில பாஜகவால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக நடத்தப்படும் முதல் நிகழ்ச்சியாகும்.

அங்கன்வாடி ஆசிரியர்கள், ஆஷா பணியாளர்கள், நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், தொழில் முனைவோர் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த பெண்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் சாலைப் பணி

தலைமை காவலா் இடைநீக்கம்

சாத்தூரில் குடிநீா் குழாய் உடைப்பு

SCROLL FOR NEXT