முகப்பு
இந்தியா

5 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைந்த வெப்பநிலை!

இந்தப் பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:29 PM
மாதிரி படம் (கோப்பு)
பகிர்:

புவனேஷ்வர்: ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் குளிர் காற்று வீசி வருவதாகவும் 14 இடங்களில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு குறைவாகப் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை ஜி.உதயகிரி பகுதியில் பதிவாகியுள்ளது.

புல்பானி, சுந்தர்கர், கோராபுத், அங்குல் உள்ளிட்ட இடங்களில் மிகக் கடுமையான குளிரும் பனிக் காற்றும் நிலவியது.

இரட்டை நகரங்களான புவனேஷ்வர் மற்றும் கட்டக் பகுதிகளில் வழக்கத்தை விட 1 முதல் 1.9 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைவாகப் பதிவாகியது.

அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு இரவு நேர வெப்பநிலையில் பெரிய மாற்றமிருக்காது எனக் கணிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு ஒன்றிரண்டு இடங்களில் நிகழலாம் என ஒடிசா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →