முகப்பு
இந்தியா

வழிப்பறி: மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!

இந்தச் சம்பவம், மெட்ரோ நிலையத்துக்கு மின்சார ரிக்‌ஷாவில் கேசாங் டோர்ஜி என்கிற 66 வயதுள்ள மூதாட்டி செல்லும்போது அவரிடமிருந்து கைப்பை திருடப்பட்டுள்ளது.

Updated On : 20 டிசம்பர், 2023 at 4:17 PM
மாதிரி படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:59 PM

புதுதில்லி: அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுள்ள மூதாட்டியிடம் அடையாளம் தெரியாத நபர்கள் வழிப்பறி செய்ய முயன்றபோது வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்து அடிபட்டுள்ளார்.

அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு தில்லி பகுதி காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம், மெட்ரோ நிலையத்துக்கு மின்சார ரிக்‌ஷாவில் கேசாங் டோர்ஜி என்கிற 66 வயதுள்ள மூதாட்டி செல்லும்போது அவரிடமிருந்து கைப்பை திருடப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து காவல் துறை துணை ஆணையர் மனோஜ் குமார் மீனா பேசும்போது, பாதிக்கப்பட்ட டோர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அருகில் உள்ள பகுதிகளில் சிசிடிவி பதிவுகள் சோதிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நபர்கள் கண்டறியப்பட்டு விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.