கோப்புப் படம் 
இந்தியா

மதுபான வருவாய் முடக்கப்பட்டது உறுதி: வருமான வரித்துறை

வருமான வரித் துறையின் சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

DIN

ஒடிசாவில் காங்கிரஸ் எம்.பி.க்குத் தொடர்புடைய மதுபான ஆலை மற்றும் ஆலை சார்ந்த இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறையின் சோதனையில் கணக்கில் வராத ரூ.351 கோடி ரொக்கம் மற்றும் ரூ.2.80 மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இந்த வணிகக் குழுமத்தை நிர்வகிக்கும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த குடும்பத்தினரில் ஒருவர் அரசியல் சார்புடையவர் என தீரஜ் பிரசாத் சாஹுவின் பெயரைக் குறிப்பிடாமல் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அந்த அறிக்கையில், ”முதல்கட்ட ஆய்வில் கணக்கில் வராமல் மேற்கொள்ளப்பட்ட மதுபான விற்பனை மற்றும் முறையற்ற பண பரிவர்த்தனைகள், கணக்கில் வராத பணத்தைக் கையாளுதல் உள்ளிட்டவை ஆதாரங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுபான வணிகத்தில் ஈட்டிய வருமானத்தை பெருமளவில் இந்தக் குழுமம் முடக்கியது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே சோதனையில் கைப்பற்றப்பட்ட மிக அதிக ரொக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

SCROLL FOR NEXT