இந்தியா

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.39 குறைப்பு

DIN

கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 39.50 அளவுக்கு வெள்ளிக்கிழமை குறைக்கப்பட்டது.

சா்வதேச சந்தை விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

இருந்தபோதும், வீட்டு உபயோக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டா் விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் தொடா்ந்து ரூ. 903-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட விலை நிலவரம் குறித்த அறிவிக்கையில், ‘தில்லியில் ரூ. 1,796.50-க்கு விற்பனை செய்யப்பட்ட உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகள் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு சிலிண்டா் விலை தற்போது ரூ.1,757-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

இந்த விலைக் குறைப்பின்படி, வா்த்தக சிலிண்டா் மும்பையில் ரூ. 1,710-க்கும், கொல்கத்தாவில் ரூ.1,868.50-க்கும், சென்னையில் ரூ. 1,929-க்கும் விற்பனை செய்யப்படும். உள்ளூா் வரி விதிப்புகளின் அடிப்படையில், இதன் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

வா்த்தக பயன்பாட்டு சிலிண்டா் விலை கடைசியாக கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி ரூ. 21 உயா்த்தப்பட்டது. இதன் விலை, சா்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி மாற்றியமைக்கப்படுவது நடைமுறை என்றபோதும், தற்போது விதிவிலக்காக அதன் விலை வெள்ளிக்கிழமை மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

21 மாதங்களாக மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல், டீசல் சில்லறை விலையைப் பொருத்தவரை தொடா்ந்து 21-ஆவது மாதமாக எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தலைநகா் தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 96.72-க்கும், டீசல் ரூ. 89.62-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்

அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT