தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்துகொண்டதை விமர்சித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் பதிலடிகொடுத்துள்ளார்.
தமிழ்நாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளபோது மக்களுடன் துணை நிற்காமல் இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார் என நிர்மலா சீதாராமன் விமர்சித்ததற்கு தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்த கபில், ஸ்டாலினை குறிவைக்காமல், நாட்டில் உள்ள பிரச்சனைகள் பலவற்றின் மீது கவனம் செலுத்தலாம் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தேஜஸ்வி யாதவிற்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்!
அவரது பதிவில் இந்தியாவின் பிரச்னைகளைப் பட்டியலிட்ட அவர், வேலையில்லா திண்டாட்டம், இந்தியாவின் பெருகிவரும் கடன், வறுமை, பட்டினி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துங்கள் என அறிவுரை கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.