இந்தியா

கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 காவலர்கள் மீது வழக்குப் பதிவு

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் மாவட்டத்தில் 18 வயது பெண்ணை ஒரு வருடத்திற்கு மேலாக, பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக மூன்று காவலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

காவல் சிறப்பு கண்காணிப்பாளர் ஆனந்த் சர்மா, மூன்று காவலர்கள் மீதான புகார் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து சனிக்கிழமை பெறப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புகார் அளித்தால் பெண்ணின் சகோதரனைப் பொய் வழக்கில் கைது செய்வதாக அவர்கள் மிரட்டியதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

காவல் பணியிலிருந்து அந்தக் காவலர்கள் விடுவிக்கப்பட்டு காவல் நிலையத்துக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

கூட்டுப் பாலியல் வன்முறை மற்றும் போக்சோ பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணின் புகாரில், மூன்று காவலர்களும் ஒரு ஆண்டுக்கு மேலாக அவரைப் பாலியல் வன்முறை செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அந்தப் பெண் அவரது தாயாரோடு வந்துள்ளார்.

போக்சோவின் விதிமுறைகளின்படி அந்தப் பெண் முதன்முதலில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட போது அவருக்கு வயது 18-க்கும்கீழ் என்பதால் இந்தப் பிரிவில் வழக்குப் பதியப்பட்டதாக ஆனந்த சர்மா தெரிவித்துள்ளார்.

புகார் பெறப்பட்ட உடனேயே முதல் தகவல் அறிக்கை தொடர்புடைய காவல் நிலையத்தில் பதியப்பட்டு காவலர்கள் மீதான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி இளைஞா் பலி

கணக்கன்பட்டியில் வேளாண் கண்காட்சி

கம்பத்தில் கண்காட்சி தொடக்கம்

அமெரிக்கன் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தொழில் முனைவோா் படிப்பு: நாளை அறிமுகக் கூட்டம்

SCROLL FOR NEXT