லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5-ஆகப் பதிவானது
லடாக்கில் செவ்வாய்க்கிழமை 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
லடாக்கில் செவ்வாய்க்கிழமை 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்தின் லே பகுதியில் இன்று (டிச.26) அதிகாலை 4.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 அலகுகளாகப் பதிவானது.
இதையும் படிக்க | மதத்தை அரசியலாக்கும் ராமர் கோயில் விழாவில் சிபிஎம் பங்கேற்காது: பிருந்தா காரத்
Advertisement
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியிலும் இன்று அதிகாலையில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.