குடியரசு தின அணிவகுப்பிற்கான தேர்வில் பஞ்சாபை நிராகரித்துள்ளது மத்திய அரசு: பகவந்த் மான்
குடியரசு தின அணிவகுப்பிற்கான தேர்வில் பஞ்சாபின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக கூறி பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
குடியரசு தின அணிவகுப்பிற்கான தேர்வில் பஞ்சாபின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக கூறி பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு பஞ்சாப் மக்களுக்கு எதிராக எவ்வளவு வன்மத்தைக் கொண்டிருக்கிறது என்பதை இது காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | எம்.பில். படிப்புகளில் சேர வேண்டாம்: மாணவர்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்!
Advertisement
Advertisement
இதுகுறித்து அவர் பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் சிங் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “பஞ்சாபியர்களின் தியாகத்திற்கான மதிப்பை இன்று மத்திய பாஜக அரசாங்கம் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்த முறையும் ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பில் பஞ்சாபின் அட்டவணை சேர்க்கப்படவில்லை. நாங்கள் மூன்று பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பினோம். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தியாகிகளின் வரலாறு, மாய் பாகோஜியின் வரலாறு, விலைமதிப்பற்ற பஞ்சாபின் பாரம்பரியம் ஆகியவற்றை அனுப்பினோம்.
இவற்றை நிராகரித்துள்ளதன் மூலம் பஞ்சாப் மக்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசாங்கம் எவ்வளவு வன்மத்தைக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | சர்னா மதத்தினை அங்கீகரிக்க வலியுறுத்தி டிச.30ல் முழு அடைப்பு போராட்டம்: பழங்குடியின அமைப்பு அறிவிப்பு
குடியரசு தின அணிவகுப்பில் பஞ்சாப், தில்லி மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த மூன்றுமே எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கக்கூடிய மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.