இந்தியா

அஸ்ஸாமின் தேஸ்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில்  3.4 ஆகப் பதிவு

An earthquake of 3.4 magnitude hit Assams Tezpur in the early hours on Wednesday, said National Center for Seismology.

DIN


தேஜ்பூர்: அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூரில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூரில் புதன்கிழமை அதிகாலை  5:55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் தேஸ்பூருக்கு கிழக்கே 42 கிமீ தொலைவில் 20 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தேஸ்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ அல்லது உயிர்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி 4.1 ரிக்டர் அளவிலும், 26 ஆம் தேதி 3.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மாத தொடக்கத்தில், அஸ்ஸாமின் கௌகாத்தியில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

SCROLL FOR NEXT