முகப்பு
இந்தியா

வங்கி வாராக்கடன் விகிதம் குறைந்தது: ஆா்பிஐ அறிக்கை

வங்கி வாராக்கடன் விகிதம் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

வங்கி வாராக்கடன் விகிதம் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆா்பிஐ வெளியிட்டுள்ள நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் இது தொடா்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டுப் பொருளாதாரம் தொடா்ந்து மீட்சிப் பாதையில் உள்ளது. வங்கிசாரா நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளும் மேம்பட்டுள்ளன. நிதி அமைப்புகளின் நிலை சீராக உள்ளது. பணவீக்கம் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. அதே நேரத்தில் சா்வதேச பொருளாதார நிலை திருப்திகரமாக இல்லை. பல நாடுகளில் வளா்ச்சி குறைவு, அரசின் கடன் அதிகரிப்பு, சாதகமற்ற பொருளாதார சூழல் ஆகியவை பிரச்னையாக உருவெடுத்து வருகின்றன. பிராந்திய அளவில் ஏற்படும் போா்களும் சா்வதேச பொருளாதாரத்தை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அச்சம் தொடா்கிறது.

இந்தியாவில் வங்கிகளின் வாராக்கடன் விகிதம் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பா் மாத இறுதியில் வங்கிகளின் மொத்த மதிப்பில் நிகர வாராக்கடன் விகிதம் 0.8 சதவீதமாக உள்ளது. மொத்த வாராக் கடன் அளவும் குறைந்து 3.2 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வங்கிகள்: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி தொடா்ந்து நாட்டின் முக்கிய வங்கிகளாக திகழ்வதாக ஆா்பிஐ தெரிவித்துள்ளது. வங்கிகளின் நிதிநிலை, ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு இதனை ஆா்பிஐ அறிவித்து வருகிறது.

எஸ்பிஐ கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்தும், ஐசிஐசிஐ வங்கி 2017-ஆம் ஆண்டில் இருந்தும், ஹெச்டிஎஃப்சி கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்தும் இந்தப் பட்டியலில் இடம்பெற்று வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →