ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவு 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவு: 2 வீரர்கள் பலி

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். 

DIN

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். 

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் உள்ள பனிச்சறுக்கு மையத்தில் இன்று பிற்பகல் (பிப். 1) கடும் பனிச்சரிவு ஏற்பட்டது.

அஃபர்வத் சிகரத்தில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் மலையடிவாரத்தில் இருந்த 10 வீடுகள் பனியில் புதைந்தன. இந்த சம்பவத்தின்போது பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த வீரர்கள் சிலர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். 

தகவல் அறிந்து அப்பகுதிக்கு ராணுவத்துடன் சென்ற அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில், இரண்டு பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்ததாகவும், 45 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநராகும் முழுத் தகுதியும் மணிகண்டனுக்கு உண்டு: சிவகார்த்திகேயன்

காங்கிரஸ்காரனாகதான் இறப்பேன்! ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கோரினார் சிவக்குமார்!

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் காலமானார்!

நியூசி. வீரர் வில் ஓ’ரூர்க் காயம்: கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

”அந்தக் கேள்வி அவர்கிட்ட கேட்டேன்” விட்டுக் கொடுக்காமல் பேசிய Ravi Mohan!

SCROLL FOR NEXT