கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: ஆயுதங்களுடன் 6 தீவிரவாதிகள் கைது

ஜம்மு-காஷ்மீர் காவல் துறை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து நடத்திய ஆபரேசனில் 6 ஜெய்ஷ்-ஏ-முகமது தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

ஜம்மு-காஷ்மீர் காவல் துறை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து நடத்திய ஆபரேசனில் 6 ஜெய்ஷ்-ஏ-முகமது தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆபரேசனில் 6 தீவிரவாதிகளிடமிருந்தும் அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல் துறை தரப்பில் கூறியதாவது: எங்களுக்கு கிடைத்த சிறப்பு தகவலின் அடிப்படையில் குல்காம் மாவட்டத்தில் உள்ள இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதுகாப்புத் துறையினர் இந்த தீவிரவாதிகளிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் அவர்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இந்த 6 தீவிரவாதிகளும் குல்காம் மாவட்டத்தில் தாக்குதல்களை நடத்தி அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டதாகத் தெரிகிறது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

நெல்லை நகரம், பாளை.யில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT