கோப்புப்படம் 
இந்தியா

நடுத்தர வர்க்க மக்களை பட்ஜெட் வலிமையாக்கியுள்ளது: பிரதமர் மோடி

இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் நடுத்தர வர்க்க மக்களை பலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

DIN

இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் நடுத்தர வர்க்க மக்களை பலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த பட்ஜெட், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளைக் காட்டிலும் மக்களுக்கு அதிகம் திருப்தியளிப்பதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மும்பையில் வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த அவர் இதனை தெரிவித்தார்.

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துப் பிரதமர் பேசியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான ஆட்சியில் வருமானத்துக்கு 20 சதவிகிதம் வரையில் வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த பட்ஜெட்டில் வருமான வரி விகிதம் பூஜ்ஜியம் ஆகும். சம்பளம் பெறும் வகுப்பினராக இருந்தாலும் சரி அல்லது நடுத்தர வர்க்க மக்களாக இருந்தாலும் சரி அவர்கள் அனைவருக்கும் இந்த பட்ஜெட் மகிழ்ச்சியளித்துள்ளது. முன்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயில்கள் ரயில் நிறுத்தங்களில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதங்கள் எழுதினர். ஆனால், தற்போது அவர்கள் வந்தே பாரத் ரயில் சேவையக் கேட்டு கடிதம் எழுதுகின்றனர் என்றார்.

இந்த வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் மற்றும் மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் உலகக் கோப்பை: கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

குன்றுகளை தகர்த்து, ஆறுகளை மடைமாற்றி... உருவாக்கப்பட்ட நவி மும்பை விமான நிலையம்!

இருமல் மருந்து: ம.பி.யில் குழந்தைகள் பலி 22 ஆக உயர்வு!

மக்களே உஷார்!! வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழால் ரூ. 97,000 மோசடி!

ஹிஜாப் அணிந்து மசூதிக்குச் சென்ற தீபிகா படுகோன்..! கடுமையான விமர்சனம்!

SCROLL FOR NEXT