இந்தியா

பெங்களூருவில் அல்-கொய்தா பயங்கரவாதி கைது: என்ஐஏ அதிரடி!

DIN

பெங்களூருவில் தனிசந்திராவில் அல்-கொய்தாவுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தாவுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக மும்பை, பெங்களூருவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தி வருகிறது. 

இந்த அதிரடி சோதனையில் இன்று காலை கர்நாடகாவின் பெங்களூரு நகரில் வைத்து அல்-கொய்தா பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஆரிப் என அடையாளம் காணப்பட்டார். அவர் பயங்கரவாத அமைப்பின் அறிவுறுத்தலின்படி செயல்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

ஆரிஃப் கடந்த 2 ஆண்டுகளாக அல்-கொய்தாவுடன் தொடர்பு வைத்திருப்பதாகத் தெரிகிறது. பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் அவர், சமூக ஊடகங்கள் மூலம் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டார். 

குற்றம் சாட்டப்பட்டவர் டெலிகிராம் மற்றும் டார்க்நெட்டில் செயலில் இருந்ததாகவும், பயங்கரவாத அமைப்பின் செய்திகளை பரப்புவதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் மாதம் ஈராக் வழியாக சிரியாவை அடைய அவர் தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிரியா செல்ல முடியாவிட்டால் ஆப்கானிஸ்தானை அடையவும் அவர் திட்டமிட்டிருந்தார்.

பயங்கரவாதியை அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT