அசாமில் மிதமான நிலநடுக்கம்
அசாமில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
அசாமில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
அசாம் மாநிலம், நாகோன் பகுதியில் இன்று மாலை 4.15 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டடு. இது ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க- ஈரோட்டில், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
Advertisement
பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், மணிப்பூரின் உக்ருல் பகுதியில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.