ஒருநாள் பயணமாக நாளை ஹரியாணா செல்கிறார் அமித்ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒருநாள் அரசுமுறைப் பயணமாக நாளை ஹரியாணா மாநிலத்திற்குச் செல்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒருநாள் அரசுமுறைப் பயணமாக நாளை ஹரியாணா மாநிலத்திற்குச் செல்கிறார்.
அமித் ஷா செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கர்னாலில் உள்ள பச்செய்ர் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
பிற்பகலில், கர்னாலில் உள்ள ஹரியாணா கூட்டுறவு ஏற்றுமதி இல்லத்தில் மதியம் 2.30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஹரியாணா கூட்டுறவுத் துறையின் பல்வேறு திட்டங்களை ஷா தொடங்கிவைக்கிறார்.
இதற்கிடையில், ஹரியாணாவில் ஷாவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் ஹரியாணாவில் எட்டு நாள்களாக நடைபெற்ற நிலையில், தற்போது ஷாவின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.